விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விடுதியின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் விளையாட்டு துறைக்கான விடுதி உள்ளது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் விடுதியின் பூட்டு உடைந்து கிடந்ததை காவலாளிகள் பார்த்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விடுதியில் இருந்த டிவி, கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் தண்ணீர் திறக்க பயன்படும் 50 குழாய்கள் என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வடவள்ளி போலீசார் ஆய்வு செய்தனர். பல்கலைக்கழகம் நியமித்துள்ள குழு விசாரணைக்கு பின்னரே முழுமையாக போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், "திருட்டு குறித்து சிறப்பு குழு விசாரித்து வருகிறது. விரைவில் திருடியது யார் என தெரியவரும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.