பெண்களுக்கு எதிரான பாலியல் சிக்கல்களை தீர்க்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனு..!

பெண்களுக்கு எதிரான பாலியல் சிக்கல்களை தீர்க்க தொடக்கக் கல்வியிலேயே பாலியல் சார்ந்த கல்வியை இணைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலையை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனு அளித்தனர்.



கோவையில் 17 வயது பள்ளி மாணவி 11ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வேண்டும் என்றும், புகாருக்கு ஆளான ஆசிரியர் மீதும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும், மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்த கோரியும், உடனடியாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், பள்ளி மாணவியின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தினர்.



அதனை, தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. சின்மயா தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் பிரச்சனை போல் பல பிரச்சனைகள் தொடர்ந்து கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடந்து வருகின்றது அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்காத வண்ணம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மையங்களை அமைத்து தர வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சிக்கல்களை தீர்க்க தொடக்கக் கல்வியிலேயே பாலியல் சார்ந்த கல்வியை இணைக்க வேண்டும். ஆண் பெண் சமத்துவத்தை கற்பிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மட்டுமின்றி அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...