அந்தமானில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை..! கோவை, நீலகிரி, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!

அந்தமானில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அந்தமான் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொள்ளும்.

இதன் காரணமாக, கன்னியாகுமரி உள்பட 20 மாவட்டங்களில் இன்றும், 16 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 18ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக வடமாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.

ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.

அதேபோல, புதுச்சேரி காரைக்கால் நகரங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மிதமான மழை பெய்யும்.

நாளை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...