பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பான்மசாலா, குட்கா, போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி தலைமையில், பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பான்மசாலா, குட்கா, போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், மக்கினம்பட்டி அமைதி நகரில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து 55 கிலோ பறிமுதல் செய்தனர்.
மேலும், பாலசுப்பிரமணியம், முருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.