கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பேரணி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக நீதிபதிகள் கலந்து கொண்ட சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் அவர்கள் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு விழாவை ஒட்டி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 75வது வெள்ளி விழாவையொட்டி, 45 நாட்கள் தொடர் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின் நிறைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கோவை மாவட்ட தலைமை நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு கொடியசைத்து சிறப்பு சட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.