மூன்று கோணத்தில் வழக்கை பிரித்து, இரண்டு பேரை கைது செய்துள்ள நிலையில், மூன்றாவது நபரை கைது செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 12 ஆம் வகுப்பு மாணவியின் வழக்கை மூன்று கோணத்தில் பிரித்து விசாரித்து வரும் காவல்துறையினர், தற்போது வரை இரண்டு பேரை கைது செய்துள்ள நிலையில், தற்கொலைக்கு தூண்டியமூன்றாவது நபரை விரைவில் கைது செய்வார்கள் என கூறப்படுகிறது.
கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள் பொன் தாரணி. மாணவி 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை, எனக்கூறி மாணவி, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார்.
அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாளிட்டு, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடனடியாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், பள்ளி மாணவின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, பெங்களூரில் தலைமறைவாகி இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மீரா ஜாக்சன் இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஆர் எஸ். புரம் காவல் நிலையத்தில், துணை ஆணையர்கள் உமா மற்றும் ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின், கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.தலைமை ஆசிரியர் நந்தினி தேவியை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறுகையில், பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் மிதுன் சக்கரவர்த்தியும், மாணவியின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவுக்கு மாணவி ஆளானது தெரிந்தும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக மீரா ஜாக்சினும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் தற்கொலைக்கு காரணம், தொடர்பாக புலன் விசாரணை தொடரும், என்றார்.
மூன்று கோணத்தில் மாணவியின் வழக்கை பிரித்து இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து, மூன்றாவது நபரை கைது செய்வார்கள் என கூறப்படுகிறது.