இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் உயிரிழந்த விவகாரம்: இருவர் கைது.!

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கோடா லொக்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.


கோவை:இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கோடா லொக்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாககருதப்படும் அங்கொட லொக்கா கோவை, சேரன்மாநகர் பகுதியில், பிரதீப் சிங் என்ற பெயரில் காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில்உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ்கள் கொடுத்து அவரது சடலம் பெறப்பட்டு மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி., வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த அம்மானி தான்ஜி, லொக்காவினுடையசடலத்தை எரிக்க உதவியாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர்கைது செய்யப்பட்டு சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கொட லொக்கா, இந்தியாவில் வசிக்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சி.பி.சி.ஐ.டி,யினர் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் அங்கு விரைந்து பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா, பெங்களூருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றிரவு கோவைக்கு அழைத்து வரப்பட்டு சி.ஜே.எம். கோர்ட் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் தொடர்ந்து பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...