கோவை மாணவி தற்கொலை வழக்கு: தலைமறைவான தனியார் பள்ளி தலைமை ஆசிரியை  தனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து கைது.

கோவை 12 ம் வகுப்பு  மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியை  தனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.



கோவை: கோவை 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியைதனிப்படை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி தற்கக்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை கைது உடுமலை கிளை சிறையில்அடைத்தனர்.

இதனிடையே , தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆசிரியரின் தவறான போக்கு குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது குற்றம் சாட்டிய மாணவியின் பெற்றோர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும். மாணவர் அமைப்பினர், தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்தனர். தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வந்த நிலையில், அவர் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில், பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் இன்னும் சில மணிநேரங்களில் பெங்களூரில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட உள்ளார்‌.

ஏற்கனவே, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளதால் இன்று மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...