கோவை புலியகுளம்‌ விநாயகர்‌ கோவில்‌ பின்புறப்‌ பகுதிகளில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில்‌ ஆய்வு..!

அடைப்புகளை சரி செய்ய பயன்படுத்தப்படும் சூப்பர் சக்கர்‌ வாகனம்‌ 85,000 லிட்டர் உறிஞ்சும்‌ திறன்‌ மற்றும் 140 பார்‌ அலகு அழுத்தத்தில்‌ நிமிடத்திற்கு 480 லிட்டர்‌ வேகத்தில்‌ நீரை செலுத்தும்‌ திறன்‌ கொண்ட வாகனம்‌ ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சுங்கம்‌ சாலை புலியகுளம்‌ விநாயகர்‌ கோவில்‌ பின்புறப்‌ பகுதிகளில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும்‌ பணிக்கு கழிவுகளை தூர்வாருவதற்கு சூப்பர் சக்கர்‌ வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,

“கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ மழைநீர் வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், ஆளிறங்கு புழைகளில்‌ சேகரமாகியுள்ள கழிவுகளை தூர்வாருவதற்கும்‌, அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளை சரி செய்யும்‌ சூப்பர் சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வாகனம்‌ அதிக நீரேற்று திறன்‌ கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85,000 லிட்டர் உறிஞ்சும்‌ திறன்‌ கொண்டது. மேலும்‌, 140 பார்‌ அலகு அழுத்தத்தில்‌ நிமிடத்திற்கு 480 லிட்டர்‌ வேகத்தில்‌ நீரை செலுத்தும்‌ திறன்‌ அடைப்பு நீக்கி (Jet rodding) கொண்ட வாகனம்‌ ஆகும்.

மேலும்‌, இவ்வாகனத்தில்‌ சேகரமாகும்‌ கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும்‌ அமைப்பினை கொண்டுள்ளது.

தற்போது சுங்கம்‌ சாலை, புலியகுளம்‌ விநாயகர் கோவில்‌ பின்புறப்‌ பகுதிகளில்‌ உள்ள மழைநீர் வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரும்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மாநகராட்சியின்‌ முக்கிய பகுதிகளில்‌ உள்ள மழைநீர் வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்தல்‌ மற்றும்‌ சேகரமாகியுள்ள குப்பைகள்‌ மற்றும்‌ மணல்‌ திட்டுகளை அப்புறப்படுத்துதல்‌ போன்ற பணிகளுக்கு இந்த வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ போர்க்கால அடிப்படையில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மற்றும்‌ அடைப்புகள்‌ சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது” என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தர்ராஜன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...