திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் கால நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் துவக்கம்..!

பருவ மழையினால் மக்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை சரிசெய்யும் வகையில், இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் கால நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பருவ மழையினால் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சேற்றுப்புண் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் 56 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பருவ மழையினால் மக்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 112 முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோன தொற்றை ஒழிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 16 லட்சம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 3 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...