2018-ம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 3-பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருப்பூர்: 2018-ம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 3-பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோநோபல்(35). இவர் அதே பகுதியில் பிரின்டிங் கம்பெனி நடத்தி வந்தார். இங்கு 10 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த சதீஷ்(19), யோகேஷ்(19), ஸ்டீபன்(19) ஆகியோர் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஜோநோபலிடம் அதிகமாகப் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த மூவரும் அவரிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 6 தேதி இரவு பிரிண்டிங் கம்பெனியில் வேலை முடிந்து அனைவரும் வீடு சென்ற சமயத்தில் மூன்று பேரும் அலுவலகத்திலிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
ஆனால் ஜோ நோபல் அவர்களை தடுக்க முயற்சித்த போது மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோம்பலின் கழுத்து மார்பு தலை பகுதியில் குத்தி கொலை செய்தனர் பின்னர் அலுவலகத்திலிருந்த 14000 பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியதில் சிவகங்கை பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜோ நோபாலை கொலை செய்த சதீஷ், யோகேஷ், ஸ்டீபன், ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.2000 அபராதம் விதித்தும் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.