கோவையில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ‌உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ உள்ள நீர்த்தேக்கத்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ தண்ணீர் சேமித்து வைக்கும்‌ சிமெண்ட்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களை வாரம்‌ ஒருமுறை பிளீச்சிங்‌ பவுடர் போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்‌.

டெங்குகாய்ச்சலை பரப்பும்‌ ஏடிஸ்‌ வகை கொசுக்கள்‌ நல்ல தண்ணீரில்‌ முட்டையிட்டு இனப்பெருக்கம்‌ செய்பவை ஆகையால்‌ நல்ல நீர் தேங்கும்‌ வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக்‌ டப்பாக்கள்‌, பூச்செடிகள்‌, பெயிண்ட்‌ டப்பாக்கள்‌ ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.33-க்குட்பட்ட தனியார்‌ அடுக்குமாடிக் குடியிருப்பில்‌ அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள்‌ கண்டறியப்பட்டதன்‌ காரணமாகவும்‌, டெங்குகாய்ச்சல்‌ பரப்பக் காரணமாக இருந்ததாலும்‌, சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.50,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...