கோவை மாநகராட்சிக்கு கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளை சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ உத்தரவின்‌ படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ கழிவுகளை தூர்வாருவதற்கு அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட இராமநாதபுரம்‌ சந்திப்பு, திருச்சி சாலை, ஓலம்பஸ்‌, ஸ்டேட்‌ பேங்க்‌ ரோடு, நஞ்சுண்டா புரம்‌, கிருஷ்ணசாமி சாலை பாலம்‌ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்யும்‌ பணிக்குக் கழிவுகளைத் தூர்வாருவதற்கு சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ தகவல்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்‌ படி, மாநகராட்சி பகுதிகளில்‌ மழைநீர்‌ வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்வதற்கும்‌ ஆளிறங்கு புழைகளில்‌ சேகரமாகியுள்ள கழிவுகளைத் தூர்வாருவதற்கும்‌ அதிக திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ உந்து மற்றும்‌ அடைப்புகளைச் சரி செய்யும்‌ சூப்பர்‌ சக்கர்‌ வாகனம்‌ கோவை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வாகனம்‌ அதிக நீரேற்று திறன்‌ கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டா உறிஞ்சும்‌ திறன்‌ கொண்டது. மேலும்‌, 140 பார்‌ அலகு அழுத்தத்தில்‌ நிமிடத்திற்கு 480 லிட்ட்‌ வேகத்தில்‌ நீரைச் செலுத்தும்‌ திறன்‌ அடைப்பு நீக்கி (Jet Rodding) கொண்ட வாகனம்‌. மேலும்‌, இவ்வாகனத்தில்‌ சேகரமாகும்‌ கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும்‌ அமைப்பினை கொண்டுள்ளது.

தற்போது இராமநாதபுரம்‌ சந்திப்பு, திருச்சி சாலை, ஓலம்பஸ்‌, ஸ்டேட்‌ பேங்க்‌ ரோடு, நஞ்சுண்டாபுரம்‌, கிருஷ்ணசாமி சாலை போன்ற மாநகராட்சியின்‌ முக்கிய பகுதிகளில்‌ உள்ள மழைநீர்‌ வடிகால்களில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைத் தூர்வாரும்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இராமநாதபுரம்‌ சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில்‌ ஏற்பட்டுள்ள அடைப்புகளைச் சரி செய்தல்‌ மற்றும்‌ இந்த பாலத்தில்‌ சேகரமாகியுள்ள குப்பைகள்‌ மற்றும்‌ மணல்‌ திட்டுகளை அப்புறப்படுத்துதல்‌ போன்ற பணிகளுக்கு இந்த வாகனம்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, கோவை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ போர்க்கால அடிப்படையில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மற்றும்‌ அடைப்புகள்‌ சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை மாநகராட்சி துணை ஆணையர்‌, உதவி ஆணையார்கள்‌, மாநகராட்சி பொறியாளர்கள்‌, இதர பணியாளர்கள்‌ ஆகியோர்‌ போர்க்கால அடிப்படையில்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77 செல்வபுரம்‌ இராமமூர்த்தி சாலையில்‌ மழையினால்‌ ஏற்பட்ட குழிகளில்‌ ஈர கலவை கொண்டு பராமரிப்பு பணிகள்‌ நடைபெற்றது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...