பொள்ளாச்சியில் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

பொள்ளாச்சி அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர் டீ காலனியை சேர்ந்த தண்டபாணி என்பவரது மகள் இந்துமதி (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபருடன் காதல் ஏற்பட்டதால், அவரை திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்களிடம் இந்துமதி சம்மதம் கேட்டதாகத் தெரிகிறது.

தன்னுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் அவரை பணிக்கு அனுப்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த இந்துமதி நேற்று இரவு அறைக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, தகவலின் அங்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...