பொள்ளாச்சியில் மின்சாரம் தாக்கி பள்ளி வாகன உதவியாளர் உயிரிழப்பு!

பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பள்ளி வாகன உதவியாளர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழைகொம்பு நாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு (47). இவர் திவான்சா புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வாகனத்தின் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை குழந்தைவேலு வழக்கம் போல் பள்ளிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் பள்ளி உரிமையாளரின் வீட்டுக்குச் சென்றவர் வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் மண்தரையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

குழந்தைவேலுவின் மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னகாமணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...