ஆசிரியரின் பாலியல் கொடுமை... கோவையில் மாணவி தற்கொலை.. மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்!

கோவையில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தியாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கம் போராட்டம் நடத்தினர்.



கோவை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை ஆசிரியரின் பாலியல் தொல்லையே தற்கொலைக்குக் காரணம் என குற்றச்சாட்டு - இதனைக் கண்டித்தும், மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைப்பெற்றது.

கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17 வயது மகள். 17 வயது மாணவி 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி 17 வயது மாணவி, அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார்.

அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்ட 17 வயது மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

17 வயது மாணவி தற்கொலைக்கு சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கண்டித்தும், மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் ஆசிரியரின் புகைப்படத்தைக் கிழித்தெறிந்தும், செருப்பால் அடித்தும் போராட்டம் நடத்தினர்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...