புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் வீட்டு முன் நின்ற மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் குமார்,இவரது மகன் புகழேந்தி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று புகழேந்தி தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது
பின்னர், இதுகுறித்து புகழேந்தி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.