கல்லாங்காட்டுபுதூர் பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பெட்ரோல் பங்கில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கோவை தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் கிணத்துக்கடவு பகுதிகளில் மாவட்ட அமலாக்கக் குழுவினர்களுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்த குழு கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இரு சிறுவர்களையும் பணியில் அமர்த்தியதாக கல்லாங்காட்டுப்புதூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெங்கடாசலம் என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் புகார் செய்தார்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.