கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்‌ பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ மாதிரி வாக்குப்பதிவு..!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற இந்த வாக்குப்பதிவை மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா நேரில்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம்‌ கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களின்‌ முன்னிலையில்‌ கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்தில்‌ உள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகள்‌ நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா அவர்கள்‌ இன்று (12.11.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம்‌ கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்களின்‌ முன்னிலையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகள்‌ தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களின்‌ மொத்த Ballot Unit - 6618 எண்ணிக்கையிலும்‌, Control Unit - 3332 எண்ணிக்கையிலும்‌ தற்போது வந்துள்ளது.

இதில்‌ 5 சதவீதம்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்‌ BELL நிறுவன பொறியாளர்கள்‌ 10 நபர்கள்‌ பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்து வருகின்றனர்‌.

இந்நிகழ்வில்‌ உதவி ஆணையாளர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (ஊரக உள்ளாட்சி தேர்தல்‌) வி.சந்தானம்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...