கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி படுகாயம்!

கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது (42), இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று கனகராஜ் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம்- வடசித்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் அதிவேகமாக வந்து மொபட் மீது பலமாக மோதியது. இதில் விவசாயி கனகராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் கனகராஜிக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கோவை ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார்(30) மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...