திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 9.13 லட்சம் வழிப்பறி செய்த 4 பேர் கைது..!

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருப்பூர் காசிபாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றவர் ராஜ பிரகாஷ். இவர் கடையில் விற்பனை தொகை 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த ஒன்றாம் தேதி கடையிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே சென்ற போது அவரை வழிமறித்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.



பின்னர், இது குறித்து ராஜ பிரகாஷ் அளித்த புகாரையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, தீவிர விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், பவித்ரன், மணிகண்டன் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனங்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...