வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பூபதி ஆகிய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை: கோவையில் அரசு பேருந்து மீது கல் வீசித் தாக்கிய வாலிபர்கள் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அண்ணாநகரை சேர்ந்தவர் பூபதி (25), அஜித் (27). இவர்கள் கடந்த 7.9.2015- அன்று திருச்சி சாலையில் நடந்து சென்றனர்.
அப்போது, அந்த வழியாக அரசு டவுன் பேருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்து மீது பூபதி, அஜித் ஆகிய 2 பேரும் கல் வீசினர். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பூபதி, அஜித் ஆகியோரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பூபதி ஆகிய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.