விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த போத்தனூரை சேர்ந்த 4 பேர் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்தது அம்பலம்.


கோவை: பல நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடி வந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள், இருசக்கர வாகனங்களை குறிவைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டம் சூலூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நீலாம்பூர், சிங்காநல்லூர், சிந்தாமணிபுதூர் ஜங்சன், கிணத்துக்கடவு , கோவை கடை வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக, சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



விசாரணையில், அந்த நால்வரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த முரளி, ஷாருக்கான், யாசர் முசாபத், ரசூல் என்பதும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவது இவர்களது வழக்கமான தொழில் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. மேலும், இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நால்வரிடமும் இருந்து இதுவரை ஆறு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நான்கு இளைஞர்களும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...