கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக 4- நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக 4- நபர்களை போலீசார் கைது செய்தனர்.
தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாகக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கைது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் தடாகம் காவல் நிலைய எல்லை பகுதியில் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜாஃபர் சித்திக் என்பவர் தலைமையில் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தடாகம் காவல் நிலைய பகுதியில் வசிக்கு அபுதாகீர்(வயது-38), சரவணகுமார் (வயது-25), பிரபு(வயது-37) மற்றும் பிரேம்குமார் (வயது-26) ஆகியோர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 2-கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.