கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை: தொடர் திருட்டால் கருமத்தம்பட்டி மக்கள் அச்சம்.!

கருமத்தம்பட்டி சூலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து ஆட்கள் இல்லாத வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்துத் திருடி வருகிற சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


கோவை: தட்டாம் புதூர் பகுதியில் பீரோவை உடைத்து, அதிலிருந்த 6.5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் வயது 65, இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மூத்த மகள் சுமதி அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பொன்னம்மாள் தீபாவளி பண்டிகைக்காக மூத்த மகள் சுமதியின் வீட்டிற்கு கடந்த 3-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு பொன்னம்மாள் அவரது வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 6.5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து, பொன்னம்மாள் கருமத்தம்பட்டி போலீசுக்கு புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்து பதிவான கைரேகைகளைக் கொண்டு கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கருமத்தம்பட்டி சூலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து ஆட்கள் இல்லாத வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்துத் திருடி வருகிற சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...