கொடநாடு எஸ்டேட் விவகாரம்: இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான டிரைவர் கனக ராஜ், சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

தடயங்களை அழித்ததாக, அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அக்டோபர் 25-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களது ஜாமின் மனு விசாரணை, நேற்று நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், 'போலீஸ் விசாரணையில், 3-மொபைல் போன்கள், 6-சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

'பல்வேறு தகவல் கிடைக்க இருப்பதால், ஜாமின் வழங்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...