அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க கூடாது: விவசாயிகள் ஊர்வலமாக சென்று எம்.பி.ராசாவிடம் மனு!

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலகிரி எம்.பி ராசாவைச் சந்தித்து இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அவரிடம் மனுவை அளித்தனர்.


கோவை: அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று நீலகிரி எம்.பி.ராசாவிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னூரில் 4-வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2- வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504-ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனைக் கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகக் கடந்த 1-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அன்னூர் சுற்று வட்டார, குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000-மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது.

இங்கு நடைபெறும் விவசாயப் பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் எங்களின் 70-ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல், என்பதற்கான முயற்சி எங்களைச் சோர்வடையச் செய்துள்ளது.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

எனவே, விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது.



தொழிற்பேட்டை திட்டம் ரத்து, என்ற சட்டப்பூர்வ அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என்ற மனுவை மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் அளித்தனர்.

இதனையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையில் வருகின்ற 15-ஆம் தேதிக்குள் அரசின் உயரதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலகிரி எம்.பி ராசாவைச் சந்தித்து இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அவரிடம் மனுவை அளித்தனர்.



வருகின்ற 16-ஆம் தேதி ஆட்சியரைச் சந்திக்க இருப்பதாகவும், அப்போது அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கும் எண்ணத்தை அரசு கைவிட்டால், விவசாயிகள் மனமார நன்றி தெரிவித்துக்கொள்ள இருப்பதாகவும், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...