கோவையில் காய்கறிகள் விலை சரிவு... தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை!

கோவை எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளன. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ.40 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளன.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், அமைந்துள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டிற்கு கர்நாடகாவிலிருந்து தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், அவரைக்காய், கோவை மாவட்டத்திலிருந்து வெங்காயம், நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவை அதிகளவில் வருகின்றன.

இங்கு சில்லறை வியாபாரிகள் தங்கள் கடைகளுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் ரூ 80-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ.40 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.8, பீர்க்கங்காய் ரூ.22, பாகற்காய் ரூ.22, புடலங்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், உருளைக்கிழங்கு கிலோ ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.37க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து மற்ற சிறிய மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் விற்பனை செய்யும்போது கிலோவுக்கு ரூ.10 வரை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...