குன்னூரில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும்- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



நீலகிரி: குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குன்னூர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 90-கோடி செலவில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்படும் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேட்டி, மழையால் மண்சரிவு ஏற்பட்ட தொட்டபெட்டா சாலையையும் ஆய்வு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாகக் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.



இந்நிலையில் குன்னூரில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரேலிய மற்றும் பந்துமை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இருப்பினும் அணை முகப்பு வாயிலில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாகத் தண்ணீர் வெளியேறி வருகிறது.



இதற்குத் தீர்வு காணும் வகையில் நகராட்சி அதிகாரிகளுடன் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் நேரில் ரேலிய அணையை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குன்னூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ரேலியா அணை அருகே புதிதாக நீரைத் தேக்கி வைக்க 90 கோடி செலவில் புதிதாக 2 தடுப்பு அணைகளைக் கட்டவும், சேதமடைந்துள்ள ரேலியா அணையைச் சீர் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, தற்போது சுற்றுலாப் பயணிகள் அனுமதியின்றி தொட்டபெட்டா சாலை மூடப்பட்டுள்ளது.



வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா மலைச் சிகரத்தைக் கண்டு ரசிக்கவும், அப்பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஒரு மாதத்திற்குள் தொட்டபெட்டா சாலையை 15 லட்சம் செலவில் சரி செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

நாளை முதல் நீலகிரியில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...