தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை?

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை அளிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை அளிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியதாவது:-

அக்டோபர் 2021 கடைசி வாரத்திலிருந்து தமிழ் நாட்டில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தீபாவளி முடிந்த பிறகு வடமேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, தாங்கள் ஓய்வின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆற்றி வருவது மக்களிடையே நல்ல நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், நிலைமைக்குத் தகுந்தாற் போல் பள்ளிகளுக்குத் தனியாகவும், கல்லூரிகளுக்குத் தனியாகவும் விடுமுறை அளித்து வருகிறார்கள்.

ஏதாவது ஒரு மாவட்டத்தில் மழை பெய்யும் பொழுது, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடும் பொழுது, கல்லூரி மாணவர்கள் மழையில் கல்லூரி செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். டிசம்பர் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி தொடருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...