கோவை மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே உள்ள குப்பைமேட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவிகளுக்கும், நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே உள்ள குப்பைமேட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவிகளுக்கும், நோயாளிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. பெண்கள் மேல் நிலைப்பள்ளி இதன் அருகே மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையும் உள்ளது.
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக நூற்றுக்கு மேற்பட்டவர்களும் வெளி நோயாளிகளாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி சுற்றுச் சுவர் அருகே அண்ணாஜி ராவ் பிரதான மெயின் ரோட்டில் குப்பைகளை மலை போல் கொட்டி விடுகிறார்கள்.
இதனைப் பல நாட்களுக்கு அப்புறப்படுத்துவது இல்லை. அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பள்ளி மாணவிகளுக்கும் அரசு மருத்துவமனை பச்சிளங் குழந்தை சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த சாலை வழியாகத் தான் பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளும் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சென்று வருகிறார்கள்.
தற்போது பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே குழந்தைகளுக்கும் சளி காய்ச்சல் இருமல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பெரும் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தற்போது தன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிப்படியாகப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
தற்போது மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவர் அருகே குப்பைகள் மலை போல் குவித்து உள்ளதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்து வருகிறார்கள்.
தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைத்து வரும் நிலையில், இதுபோன்று குப்பைமேடு நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற காரணத்தினால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து விடுவார்கள்.
ஆகவே தமிழக அரசு மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுப் புறத்தைச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை நேரில் ஆய்வு செய்யக் கோரி அங்கு மாணவிகளுக்குக் கல்வி கற்க இடையூறாக இருக்கும் குப்பைகளையும் சாக்கடை களையும் தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.