பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளி கைது..!

13 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளி, குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரதிகண்ணன் (20). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் பாரதி கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணன் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாரதிகண்ணன் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...