கோவை அருகே முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்து முந்த முயன்ற வாலிபர் லாரியின் சக்கரத்தில் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
கோவை: கோவை அருகே முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்து முந்த முயன்ற வாலிபர் லாரியின் சக்கரத்தில் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சூலூர் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் வயது 33, தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கோவை பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் சுரேஷின் மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்ததும் சூலூர் இன்ஸ்பெக்டர் மதியண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விபத்தில் இறந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.