வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கோவை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாரஸ் அகமது தெரிவித்துள்ளார்.
கோவை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கோவை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாரஸ் அகமது தெரிவித்துள்ளார்.
நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மட்டும் விடுமுறை என்றும், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தாரேஸ் அகமது தலைமையில், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தாரேஸ் அகமது இ.ஆ.ப பேசுகையில், கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
தாலுகா வாரியாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை தொலைப்பேசி வாயிலாக 24 மணி நேரமும் தெரிவிக்கக் காவல் கட்டுப்பாட்டு அறை, பேரிடர் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரச்சினையாக இருக்கக்கூடிய பகுதிகளை நாளை முழுவதுமாக பார்வையிட உள்ளேன். மாவட்டம் முழுவதும் பருவமழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், வால்பாறை மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் பவானி ஆற்றுப் படுகையில் பகுதி என மொத்தம் 27இடங்கள் பதற்றம் உள்ள பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த பகுதிகளில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏழு நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வைத்துள்ளோம் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.
எந்த பிரச்சனை வந்தாலும் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்காக 1835-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது. கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை இருப்பதால் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க குழுக்கள் அமைக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல, மாநகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தயார் நிலையில் உள்ளது என்றனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாரஸ் அகமது இ.ஆ.ப, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் ஆகியோர் இருந்தனர்.