கோவையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து கொள்ளை!

பி.ஆர்.எஸ் காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவை: பி.ஆர்.எஸ் காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை பி.ஆர்.எஸ் காவலர் குடியிருப்பில் உதவி ஆணையர் முதல் காவலர் வரை ஆயிரம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து வந்த மர்ம நபர் ஒருவர் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆயுதப்படை காவலர் ரமேஷ் என்பவரது வீட்டிற்குப் பணி முடிந்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த லேப்டாப், பவர் பேங்க், ரெயின் கோட் திருடு போயுள்ளது.

இதே போல ஆயுதப்படை தலைமைக் காவலர் ராஜன் குடும்பம் வெளியூர் சென்று இருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 32-சவரன் தங்க நகை 90-ஆயிரம் ரூபாய் ரொக்க பணம கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இத்திருட்டு குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர் ஒருவர் பாப்பநாயக்கன் பாளையம் வழியாக பி.ஆர்.எஸ் காவலர் குடியிருப்பிற்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு, காவலர் மருத்துவமனை வழியாக செல்லும் சிசிடிவி கட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் இதே பி.ஆர்.எஸ் காவலர் குடியிருப்பில் 42,000 ரூபாயை கொள்ளையடித்துச்சென்ற நபர் தான், இந்த கொள்ளையிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...