மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குப் பாதுகாப்போடு இருக்கும் படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குப் பாதுகாப்போடு இருக்கும் படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கித் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னையில் பெரும்பாலும் பல்வேறு பகுதிகளிலும் மழைவெள்ளத்தால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மழை காரணமாகச் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குச் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, சென்னைக்கு இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன்.
இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.