கோவை - பழனி பயணிகள் இரயில் கட்டண உயர்விற்கு பி.ஆர். நடராஜன் எம்.பி கண்டனம்!!

கோவை - பழனி பயணிகள் இரயில் சேவையை வரவேற்கிறேன் ஆனால், அதே நேரத்தில் பயண கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை- பழனி இடையேயான பயணிகள் இரயில் கட்டண உயர்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் கல்வி நிலையங்கள், சிறுகுறு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக தலைநகராக உள்ளது. நாள்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்திற்குள் வருவதும், செல்வதுமாக உள்ளனர்.

இதன்காரணமாக அதிகப்படியான வருவாயை நமது கோவை ரயில்வே துறை ஈட்டி வருகிறது. இரண்டு முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வசதிகள் கோவை ரயில்நிலையம் மற்றும் வடகோவை ரயில்நிலையத்திற்குச் செய்து தரப்பட்டது.

மேலும், எனது தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் கோவையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட்டது. மேலும், கோவை ரயில் நிலையத்தை ஆதார் அந்தஸ்து பெற முடிந்தது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் அனைத்து பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த மாதம் ரயில்வே துறைக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அடுத்தடுத்த ரயில்கள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது.



தற்போது கோவை - பழனிக்கு பயணிகள் இரயிலை சேவை துவக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையைக் கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறேன். அதே நேரத்தில் பயண கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இது ஏற்கனவே கொரோனா பதிப்பால் வேலையின்மை, வருவாய் இழப்பு போன்ற துயரத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். கோவை முதல் பழனி வரையில் செல்லும் ரயில் சேவைக்குப் பயண கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தி உள்ளது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சுமையேற்றும் நடவடிக்கையாகும்.

உடனடியாக இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்று முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். மேலும், அனைத்து ரயில் சேவைகளையும் விரைந்து இயக்கிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...