கோவை மாவட்ட ஆட்சியர் மரு.ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் வாலாங்குளம் முதல் பழைய சுங்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வாலாங்குளம், பழைய சுங்கம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மரு.ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மரு.ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் வாலாங்குளம் முதல் பழைய சுங்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்கள்.

அதன் பின்னர், இராமநாதபுரம் சந்திப்பு மற்றும் ரவுண்டானா பகுதிகளிலும் இன்று (10.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, “கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண்.73, 68, 67, 69 ஆகிய பகுதிகளில் திருச்சி சாலையில் அமைந்துள்ள மழைநீர் வடிகாலில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுவரும் பொழுது வாய்க்காலில் போதிய அளவு இல்லாததால் வெள்ளநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
தற்போது இரவு பகல் பார்க்காமல் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மாநகராட்சி பகுதியில் வழிந்தோடும் வெள்ளநீரை நஞ்சுண்டாபுரம் சாலை வழியாக நொய்யல் ஆற்றை தொடுவதற்கு ஏதுவாக இராமநாதபுரம் சந்திப்பில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்து இணைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
தற்போது இராமநாதபுரம் சிக்னலில் இருந்து கிழக்கு நோக்கி சங்கனூர் பள்ளம் வரை சாலையில் எந்த வெள்ளநீரும் நிறைந்து ஓடாமல் மழைநீர் வடிகாலில் செல்ல ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு தொடர்ந்து போலீஸ் கந்தசாமி சந்திப்பிலிருந்து இராமநாதபுரம் சிக்னல் வரை வெளிவரும் வெள்ளநீரை அப்புறப்படுத்தும் பணியையும் துரிதமாக நடைபெற்றுவருகிறது.'” என மாவட்ட ஆட்சியர் மரு.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் பயிற்சி சரண்யா, மாநகர காவல் துணை ஆணையார்கள் ஜெயச்சந்திரன், உமா, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் ஆர்.சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.