கோவையில் செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக கூறி ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி..!

செல்போன் டவர் அமைக்க இடம் அளித்தால் மாதந்தோறும் வாடகை பணம் தரப்படும் என்று கூறி 6.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் 6½ லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தந்தை பெரியார் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா (61). இவர் கோவை ஆயுதப்படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு தகவல் வந்தது. அதில் செல்போன் டவர் அமைக்க இடம் அளித்தால் மாதந்தோறும் வாடகை பணம் தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, அதை உண்மை என்று நம்பிய அமானுல்லா அந்த வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் எதிரே பேசிய நபர், செல்போன் டவர் அமைக்க இடம் அளித்தால் முன்பணமாக ரூ.30 லட்சமும், மாதம் தோறும் வாடகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால், அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 750-ஐ தான் கூறும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய அமானுல்லா, அந்த மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 750-ஐ செலுத்தினார்.

பின்னர், செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக எந்தவித தகவலும் இல்லை. இதனால் அவர், அந்த வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச்-ஆப் என்று வந்தது.

அதன்பிறகு, பல முறை முயன்றும் அந்த எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அமானுல்லாவிடம் மோசடி செய்தது சுஜித் குமார், பூனம் தேவி, கரன்தீப்சிங் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...