கோவையில் மழையால் அதிகரிக்கும் டெங்கு: 8 நாள்களில் 8 பேருக்கு பாதிப்பு..!

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக டெங்கு அதிகரித்துள்ளதுடன் கடந்த 8 நாள்களில் 8 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 1ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை மாவட்டத்தில் 8 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வட்டாரம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதாரண காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் வீடுவீடாக சென்று களப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரேபிட் ரெஸ்பான்ஸ் குழு மூலம் டெங்கு பாதிப்புகள் விரைந்து கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் தடுப்பு பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்கு இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

ஊராட்சிகள் வாரியாகவும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொது மக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து பொது இடங்களிலும், வீடுகளை சுற்றிலும் கழிவுகளை கொட்டாமல் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது, சுகாதாரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் வேண்டும் என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...