கோவையில் எந்திரங்கள் வாங்குவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 17 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை!

புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: கோவையில் எந்திரங்களை வாங்குவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி சங்கனூர் காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் தொழில் அதிபர் மேத்யூ (38). இவர் ரத்தினபுரியில் தேங்காய் பருப்புகளை பிரித்து எடுக்கும் எந்திரங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனம் குறித்து இணையதளங்களில் விளம்பரம் செய்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் இருந்து அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் எந்திரங்களை ரூ.9 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கி ஒரு நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளதாகவும், அதற்கு 2 சதவீதம் வரை கமிஷன் தரவேண்டும். கூடுதல் தகவலுக்கு வாட்ஸ் -அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை உண்மை என நம்பிய மேத்யூ, அந்த வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர், உங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் எந்திரங்களை டெண்டர் அடிப்படையில் ஒரு நிறுவனத்துக்கு வாங்கி கொடுக்க ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 114-ஐ கமிஷனாக தரவேண்டும் என்று கூறி அந்த தொகையை செலுத்த வங்கி கணக்கு எண்ணையும் கூறினார்.

இதையடுத்து, உடனே மேத்யூ அவர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணில் 13 தவணைகளாக ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 114-ஐ செலுத்தினார். பின்னர் அவர், தனக்கு வந்த மெயில் முகவரி மற்றும் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டார். அதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேத்யூ கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...