அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு பிரதிநிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
கோவை: கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கிராம சபை மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி மழையால் இன்று ரத்து செய்யப்படுவதாக திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு பிரதிநிதியாக நியமித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறுவிதமான கூட்டங்களில் பங்கெடுத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோவையில் பல்வேறு இடங்களில் கிராமசபை மூலமாக மக்களுடைய அத்தியாவசிய தேவைகளான குடிநீர், போக்குவரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை மக்களிடம் மனுக்களாக பெற்றுவந்தார்.
அதேபோல், 10-ந் தேதி இன்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மழையின் காரணமாக இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளக் கூடிய நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக கோவை மாவட்ட கிழக்கு திமுக பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.