பழங்குடியின குக்கிராமங்களைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறும் நிலையில் சந்தியா தனது சமூகத்தில் முதல் பட்டதாரியாக வலம் வருகிறார்.
கோவை: கோவையில் பழங்குடியின குக்கிராமங்களைச் சேர்ந்த ஒரு சில மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறும் நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே மத்வராயபுரம் பகுதியில் கல்கொத்தி பழங்குடியினர் குடியிருப்பில் 19 வயது சிறுமி சந்தியா தனது சமூகத்தில் முதல் பட்டதாரியாக வலம் வருகிறார்.
வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கிறார். இவர் தனது சமூகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை முடித்து கல்லூரியில் நுழைந்த முதல் மாணவி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்தியா கூறுகையில்,
குக்கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களைப் போல் படிப்பை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டேன். அன்றாடக் கூலித் தொழிலாளியான என் விதவைத் தாயின் வாழ்க்கையை சமாளிக்கும் போராட்டத்தைப் பார்த்து வளர்ந்த பிறகு, 'நான் உயர் படிப்பைத் தொடர முடிவு செய்தேன்,' என்றார்.
மேலும், இவர் குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு உதவுவதற்காக வகுப்புகளை நடத்துகிறார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அரசுப் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக சந்தியா தெரிவித்தார்.