மக்கள்‌ சபை நிகழ்ச்சியின்‌ மூலம்‌ 27,374 -மனுக்கள்‌ பெறப்பட்டது-அமைச்சர்‌ செந்தில்பாலாஜி தகவல்!

கோவை மாவட்டத்தில்‌ இதுவரை 44-இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியின்‌ மூலம்‌ 27,374 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 44-இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியின்‌ மூலம்‌ 27,374 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 38, 30, 31, 41, 40, 46, 47, 55, 39, 38 ஆகிய வார்டு பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்கள்‌.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்கள்‌ தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ இதர வசதிகள்‌ தொடர்பான குறைகள்‌ குறித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடும்‌ வகையில்‌ கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்‌, சிங்காநல்லூர்‌ ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி‌ தலைமையில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சி இன்று 09.11.2021 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌ முன்னிலை வகித்தார்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா வரவேற்புரையாற்றினார்‌. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்கள்‌.



மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.28 விமல்ஜோதி மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளி, சரவணம்பட்டி, வார்டு எண்‌.30 இளங்கோ மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளி, எஸ்‌.ஆர்‌.பி. நகா்‌, சரவணம்பட்டி, வார்டு எண்‌.31 அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தோட்டம்‌ நகா்‌, சரவணம்பட்டி, வாடு எண்‌.41 மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம்‌, வார்டு எண்‌.40 வி.ஜி.ராவ்‌ நகா்‌ நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம்‌, ஆவாரம்பாளையம்‌, வார்டு எண்‌.46 மற்றும்‌ வார்டு எண்‌.47 எஸ்‌.இ.எஸ்‌.மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.55 அவினாசி ரோடு, மீனாட்சி ஹால்‌, வார்டு எண்‌.39 கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி, வார்டு எண்‌.38 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பயனிர்‌ மில்‌ ரோடு, பீளமேடு ஆகிய பகுதிகளில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை நிகழ்ச்சிகளில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-



தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌, நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும்‌, மொத்தம்‌ 150 இடங்களில்‌ மாவட்டத்தின்‌ அனைத்து துறை அதிகாரிகள்‌ நேரில்‌ சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறும்‌ மாபெரும்‌ மக்கள்‌ சபை நிகழ்ச்சியானது கடந்த 30 தேதி முதல்‌ துவங்கப்பட்டு, இதுவரை 44 இடங்களில்‌ நடைபெற்ற மக்கள்‌ சபை

நிகழ்ச்சியில்‌ பொதுமக்களை நேரில்‌ சந்தித்து 27,374 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது.

அவற்றில்‌ பாதிக்கும்‌ மேற்பட்ட மனுக்களின்‌ மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மிக விரைவில்‌ மீதமுள்ள மனுக்கள்‌ மீதும்‌ துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்‌ என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. முதலமைச்சரின்‌ மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ள பெரியோர்கள்‌, தாய்மார்கள்‌, இளைஞர்கள்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நான்‌ ஒரு உறுதியளிக்கிறேன்‌ இங்கு வருகை தந்துள்ள மாவட்டத்தின்‌ அனைத்து துறையைச்‌ சார்ந்த அதிகாரிகளும்‌ உங்களது கோரிக்கை மனுக்கள்‌ மீது உரிய வகையில்‌ மிக விரைவாக ஆராய்ந்து, நடவடிக்கை எடுத்து அரசின்‌ உத்தரவுகளை பெற்றுத்தருவார்கள்‌ என்ற உறுதியை அளிக்கிறேன்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ இதுவரை நடைபெறாத ஒரு சரித்திர சாதனையாக முதலமைச்சர்‌ அவர்கள்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 100 வார்டுகளில்‌ ஒரு வார்டுக்கு ஒரு இடமென தோர்வு செய்யப்பட்டு பொதுமக்களை நேரில்‌ சென்று சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு உரிய தீர்வுகளைக்‌ காண வேண்டுமென உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்‌.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சிப்‌ பகுதிகள்‌ முழுவதும்‌ கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்‌ செய்யும்‌ அளவிற்கு முதலமைச்சரின்‌ உத்தரவின்படி சிறப்புத்‌ திட்டம்‌ அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள்‌ பெற்று மேம்படுத்தக்‌ கூடிய பணிகள்‌ முன்னெடுக்கப்பட உள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பிலும்‌, குடிநீர் வாரியத்தின்‌ சார்பிலும்‌ திட்ட மதிப்பீடுகள்‌ தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும்‌ கணக்கெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு நிதிகளை பெற்று சாலைகள்‌ சரிசெய்யப்பட்டு விரைவில்‌ தீர்வு காணப்படும்‌ என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்‌.

மேலும்‌, தோதல்‌ நேரத்தில்‌ முதலமைச்சர் 505 வாக்குறுதிகளைத்‌ தந்தார்கள்‌. அதில்‌ முதலமைச்சர்‌ ஆட்சிப்பொறுப்பேற்ற 5 மாத காலத்தில்‌ 202 வாக்குறுதிகளை நிறைவேற்றித்‌ தந்திருக்கின்றார்கள்‌. குறிப்பாக தாய்மார்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு 4 ஆயிரம்‌ நிவாரண உதவித்தொகை மற்றும்‌ கோவிட்‌ காலத்தில்‌ 14 வகையான பொருட்கள்‌ இலவசமாக வழங்கியிருக்கின்றார்கள்‌. 

பெட்ரோல்‌ விலை மற்றும்‌ ஆவின்‌ பால்‌ விற்பனை விலைகளை குறைத்துள்ளார்கள்‌. மேலும்‌, அரசு பேருந்துகளில்‌ மகளிருக்கு இலவச பயணம்‌ என பல்வேறு சிறப்புத்‌ திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள்‌. கோவை மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்கு, மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள்‌ உட்பட 234 தொகுதிகளிலும்‌ பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர்‌ வழங்க இருக்கின்றார்கள்‌.

மேலும்‌, இந்நிகழ்ச்சிக்கு வந்து மனுக்களை கொடுத்துள்ள அனைவரின்‌ கோரிக்கைகள்‌ மீதும்‌ நிச்சயம்‌ துறை ரீதியாக தீர்வு காணப்பட்டு, முதலமைச்சரின் அரசு உத்தரவுகள்‌ உங்கள்‌ கரங்களில்‌ விரைவாக கொண்டுவந்து சோக்கப்படும்‌ என்ற உறுதியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, பருவ மழைக்காலங்களில்‌ பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும்‌ இல்லாத வகையில்‌ சீரான மின்‌ விநியோகம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என முதலமைச்சர்‌ உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்‌. குறிப்பாக தமிழகம்‌ முழுவதும்‌ மாவட்டத்தின்‌ ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில்‌ மின்சாரத்‌ துறையைச்‌ சார்ந்த உயர்‌ அதிகாரிகளும்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌. பருவ மழையை எதிர்கொள்ளும்‌ வகையில்‌ போர்க்கால அடிப்படையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளபட்டு வருகின்றன. குறிப்பாக 1 இலட்சம்‌ மின்‌ கம்பங்கள்‌ மற்றும்‌ அதற்கான பாகங்கள்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளன.

சென்னையை பொறுத்தவரையில்‌ ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு மட்டுமல்லாது தமிழகம்‌ முழுவதுமே அந்தந்த மாவட்டங்களில்‌ அதிகாரிகள்‌, பணியாளர்கள்‌ தங்களது பணிகளை மேற்கொள்ள தயார்‌ நிலையில்‌ உள்ளார்கள்‌.

எனவே, எந்தவித பாதிப்புகளும்‌ இல்லாத வகையில்‌ பொதுமக்களுக்கு சீரான மின்‌ விநியோகம்‌ வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌ என மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தெரிவித்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையா கிருஷ்ணன்‌, முன்னாள்‌ சிங்காநல்லூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ நா.கார்த்திக்‌, முன்னாள்‌ மேயர்‌ கணபதி ப.ராஜ்குமார்‌, வடக்கு மண்டல உதவி ஆணையா்‌ ஆர்‌.மோகனசுந்தரி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...