பொள்ளாச்சியில் 13-வயது சிறுமியை திருமணம் செய்த 21-வயது வாலிபர் போக்சோவில் கைது!

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 13-வயது சிறுமியை திருமணம் செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே கேரளா எல்லைப் பகுதி தனது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது 13-சிறுமிக்கும் 21-வயது வாலிபருக்கும் கடந்த ஒரு மாதமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடந்த சில தினங்கள் முன்பு கூட்டிச் சென்று திருமணம் செய்துள்ளார்.

சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...