திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி!

திருப்பூர் மாவட்டத்தில், நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாக, திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி இன்று நடந்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நகர உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஏதுவாக, திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,512 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 11 லட்சத்து, 68 ஆயிரத்து, 682 ஆண்கள், 11 லட்சத்து, 97 ஆயிரத்து, 236 பெண்கள், 293 திருநங்கைகள் என, 23 லட்சத்து, 66 ஆயிரத்து, 211 வாக்காளர் உள்ளனர்.

விரைவில், நகர உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான பட்டியலை தயாரிக்க, தேர்தல் பிரிவினர் களமிறங்கியுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை முடிக்க இருக்கின்றனர். பட்டியல் தயாரானதும், அதன் அடிப்படையில் ஓட்டுச்சாவடிகள் அமைவிடம் குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள் 16 பேரூராட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், வேட்புமனு தாக்கலை துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 16 பேரூராட்சிகளில், 246 வார்டுகள் உள்ளன. அவற்றில், 259 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.



அவற்றில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.



ஓட்டுப்பதிவு இயந்திரங்களின், செயல்திறனைச் சரிபார்க்கும் முகாம் இன்று நடந்தது. 'பெல்' நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திரங்களையும் சரிபார்த்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...