கோவையில் தொடர் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் கைது-34-பவுன் தங்க நகைகள் பறிமுதல்!

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.


கோவை :கோவையில் தொடர் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு 34-பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொடர் கொள்ளை வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் லூர்தராஜ், தலைமைக் காவலர் அனந்தீஸ்வரன்(2189) மற்றும் காவலர்கள் ராஜ்குமார் (739), சுந்தர் (1132) ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

இத்தனிப்படை குழுவினர் துரிதமான முறையில் விரைந்து செயல்பட்டு துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளியான உதயகுமார் (வயது-30) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்த இருந்த 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தும், மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...