கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் 100-சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன.
அதன்படி மாநகர மைய பகுதியில் அமைந்துள்ள உக்கடம் வாலாங்குளம் 100-சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், குளத்திலிருந்து நீர் வெளியேறி திருச்சி சாலை வழியாக ஆறு போல் ஓடி வருகிறது.
ஏற்கனவே, மழையால் சாலைகள் மோசமடைந்து மழை நீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சூழலில், தற்போது குளத்திலிருந்து நீர் வெளியேறி வருவதன் காரணமாகவும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
உக்கடம் பெரியகுளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் இந்த குளத்தில் சேரும் நிலையில், உக்கடம் பெரிய குளத்திலிருந்து வெளியேறும் நீரை தடுக்காமல் விட்டதாலும், வாலாங்குளத்தில் இருந்து நீர் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் சுமார் 160-ஏக்கர் பரப்பளவு கொண்ட வாலாங்குளம் இந்த ஆண்டு மிக வேகமாக நிரம்பியது.
வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்தால், திருச்சி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழும் என்றும் அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. இந்நிலையில், தற்காலிகமாக வாலாங்குளத்தில் உள்ள ஷட்டர் திறக்கப்பட்டு, தண்ணீர் மீண்டும் உக்கடம் பெரியகுளம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உக்கடம் செல்லும் சாலையின் ஓரமாக உள்ள குளத்தின் கரையோர ஒரு பகுதியில் கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் தற்காலிகமாக நீரை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதிலிருந்து தடுக்கும் என்றாலும், ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாக்கடை கால்வாய் வழியாக நீர் சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது அதில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருந்ததால் தான், திருச்சி சாலையில் நீர் அதிகளவு வெளியேறுவதாகவும், வாலாங்குளத்தில் இருந்து நீர் சேரும் அம்மன் குளம் தற்போது அழிந்ததும், வாலாங்குளத்தில் முறையான நீர் வெளியேற்று (outlet) பாதை இல்லாததும் ஆண்டுதோறும் மழை கொஞ்சம் அதிகமாகப் பெய்தாலும் இந்த பிரச்சினை வருவதால், அதனைச் சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.