கோவையில் வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது!

வீடு புகுந்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டவரை கோவை மாவட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்து, அவரிடமிருந்து 10-பவுன் தங்க நகை, லேப்டாப்-1, கேமரா-1 மற்றும் ஐ பேட்-1 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.


கோவை :வீடு புகுந்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டவரை கோவை மாவட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர்கள் உதயச்சந்திரன், பாண்டியராஜ், தலைமைக் காவலர் மகாராஜன் (HC 1390) மற்றும் முதல்நிலைக் காவலர் முத்துக்கருப்பன்(Gr 1 2004) ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

இத்தனிப் படைக்குழுவினர் துரிதமான முறையில் விரைந்து செயல்பட்டு கிருஷ்ணாபுரம் மற்றும் சோமனூர் பகுதியில் கடந்த 01.11.2021-ம் தேதி வீடு புகுந்து கொள்ளையடித்து மற்றும் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற வழக்கின் குற்றவாளியான முபாரக் அலி (வயது 29) கைது செய்தும், அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகை, லேப்டாப்-1, கேமரா-1 மற்றும் ஐ பேட்-1 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...