கோதவாடி குளத்திற்கு ஊற்று நீரை கொண்டு சென்ற விவசாயிகள்!

கிணத்துக்கடவு அருகே வாய்க்கால் அமைத்து ஊற்று நீரை கோதவாடி பகுதியில் உள்ள குளத்திற்கு விவசாயிகள் திருப்பிவிட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே வாய்க்கால் அமைத்து ஊற்று நீரை கோதவாடி பகுதியில் உள்ள குளத்திற்கு விவசாயிகள் திருப்பிவிட்டனர்.

கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் 152-ஏக்கர் பரப்பளவில் உள்ள மிக பெரிய கோதவாடி குளம் உள்ளது.

இந்த குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்றக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து குளத்தில் பகுதியிலுள்ள முட்புதர்களை அகற்றவும், குளத்தில் கரைகளையும் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வடகிழக்கு மழை காரணமாகக் கடந்த சில நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளையும் சீரமைக்கும் பணி நிறைவு பெற்று முடிந்துள்ளது.

இந்த குளத்திற்கு விவசாயிகள் மற்றும் கோதவாடி குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் மழை காலங்களில் வீணாகச் செல்லும் உபரி நீரைக் கோதவாடி குளத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் பிஏபி அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து உள்ளனர்.

கோதவாடி குளத்திற்கு பிஏபி வாய்க்கால் மூலம் உபரி நீர் வழங்க அதிகாரிகள் இன்னும் முன்வராததால் கோதவாடி குளத்திற்கு உபரிநீர் எப்போது கிடைக்கும் என்ற கனவோடு விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருவதால் கோதவாடி குளத்தின் அருகிலுள்ள தோட்டங்களில் மழை நீர் ஊற்று எடுத்து வருகிறது.



இதனால் தற்போது கோதவாடி குளம் அருகே இருக்கும் விவசாயிகள் நிலத்திலிருந்து ஊற்று எடுத்து வரும் தண்ணீரை வாய்க்கால் ஏற்படுத்திக் கோதவாடி குளத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...